வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இடி - மின்னலுடன் கூடிய கனமழைக்கு 
வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் 
கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு 
வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை 
பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் 9 செ.மீ. மழையும், சேலத்தில் 7 செ.மீ மழையும், 
போச்சம்பள்ளி, பெரம்பலூரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாயப்பு 
உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.