Asianet News TamilAsianet News Tamil

இன்று வெளியிடப்படுகிறது பிளஸ் -2 தேர்வு முடிவுகள்…. 9.30 மணிக்கு மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்….

today plus 2 results will published
today plus 2 results will published
Author
First Published May 16, 2018, 6:11 AM IST


தமிழகம், புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 பேர் தேர்வு எழுதினர்.

today plus 2 results will published

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத் தாள்கள் திருத்தப்பட்டன. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்ததும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அப்பணியும் நிறைவடைந்தது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

today plus 2 results will published

அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தன்.வசுந்தராதேவி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நிமிடங்களில்  மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப் பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள்அனுப்பப் படும். மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in  www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

today plus 2 results will published

எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும்.

தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios