Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிப் பரிசாய்க் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!! சென்னையில் இன்றைய விலை எவ்வளவு?

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

Today Fuel price in chennai
Author
Chennai, First Published Nov 4, 2021, 12:47 PM IST

தினம் தினம் உயரும் பெட்ரோல், டீசல் விலை, ஒரேயடியாக உயர்த்தப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை என்று விலைவாசி உயர்வுக்கான அனைத்தும் கனகச்சிதமாக சமீப நாட்களில் நடந்து வந்தது. இன்ப அதிர்ச்சியாக நேற்று திடீரென்று தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் விலைவாசி குறையும் என்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாயும் குறைந்துள்ளது.

Today Fuel price in chennai

மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளாகவும் உள்ளது. மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என பாஜகவினர் கூறிவருகின்றனர்.

Today Fuel price in chennai

இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தம் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஓபெக்கின் கூட்டம் நடைபெறுகிறது. உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும். உற்பத்தி அதிகரிக்கப்படாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios