Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க !!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் 5 ஆயிரம் கேங்க்மேன்  பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

TNEB vaccancy
Author
Chennai, First Published Apr 26, 2019, 7:59 AM IST

இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணி: கேங்க்மேன் (பயிற்சி)
காலியிடங்கள்: 5000
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNEB vaccancy
சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். 

பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை -1-ல் (அதாவது ரூ.16,200 51,500 )   பொருத்தம் செய்யப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNEB vaccancy

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.06.2019விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2019

Follow Us:
Download App:
  • android
  • ios