தமிழகத்தில் “மெடிக்கல் எமர்ஜென்சி” அறிவித்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் மரணம் நிகழாத வகையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்குவிற்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளனர். இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. மேலும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்தாண்டு மட்டும் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்து இருந்தார். 

எனவே, தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் மெடிக்கல் எமர்ஜென்சி” அறிவித்து, தரமான சகிச்சை அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து  உள்ளார்.