புனித வெள்ளி, வார இறுதி நாட்கள்: தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என அடுத்தடுத்து விடுமுறை வரவுள்ளதால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது

TN Govt operate special buses on good friday and week end days smp

புனித வெள்ளி (29/03/2024), சனிக்கிழமை (30/03/2024) மற்றும் ஞாயிற்றுக் கிழமை (31/03/2024) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட்டவுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/03/2024, 29/03/2024 மற்றும் 30/03/2024 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும், 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

வாட்டி வதைக்கும் வெயில்! குளிர வைக்க வரும் கோடை மழை! 2 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்காம்!

அத்துடன், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,622 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 3,929 பயணிகளும், சனிக்கிழமை 2,367 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 12,500 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்தாலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios