தமிழகத்தில் 6 இடங்களில் மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 இடங்களில் மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்,தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 புதிய மகப்பேறு மருத்துவமனை மையங்கள் அமைக்க ரூ.41.34 கோடி நிதி விடுவிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2021 -2022 சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, இதுக்குறித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோபிசெட்டிபாளையம், அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு தலா ரூபாய் 6.90 கோடி வீதம் 6 புதிய கட்டடங்கள் ரூபாய்.41.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம், திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய் சேய் நலக் கட்டடங்கள் கட்ட அனுமதி மற்றும் கட்டட பணிகளுக்கு மொத்தம் ரூ. 41.34 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.