தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் இவ்வளவா..? லேட்டஸ்ட் நிலவரம்
தமிழகத்தில் இன்று 1179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 1179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா நிலவரம் பற்றிய தகவல்களை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
இன்று 1179 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 26,89,463 ஆக இருக்கிறது.
16 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 11 பேர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35,928 ஆக இருக்கிறது.
1407 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,39,3209 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இன்னமும் 14,326 பேர் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.