3 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாமே..! இந்த விவரத்தை படிங்க....

ரேஷன் கடையில் தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்க வில்லை என்றால் ரேஷன் கார்டு இது செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்து உள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ரேஷன் கடைகள் பற்றி பல்வேறு கோரிக்கைகளை  முன் வைத்தும், சில விளக்கங்களையும் அமைச்சர் காமராஜிடம் கேட்டார்

அப்போது, "மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மூன்று மாதங்களுக்கு  உணவு பொருட்களை வாங்காத குடும்ப அட்டைகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகள் முன்வர வேண்டும் என சொல்லி இருந்தார். ஏழை எளிய மக்கள் வேலைக்கு சென்று விடுவதல் சில நேரங்களில் பொருட்கள்  வாங்க முடிவதில்லை. அல்லது வெளி ஊர்களுக்கு சென்று இருந்தால் இதற்காக மட்டும் எப்படி வந்து பொருட்கள் வாங்க முடியும்.... எனவே மத்திய மந்திரியின் அறிவுரைகளை தமிழக அரசு ஏற்க கூடாது என  கேட்டுக்கொண்டார்

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ்,  மத்திய மந்திரி அதை  ஒரு அறிவுரையாக தான் கூறி உள்ளார்... அது ஒரு கொள்கை முடிவு அல்ல....

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 5 மாதம் பொருட்கள் வாங்க வில்லை என்றாலும் வந்தபின், ஊர் திரும்பியதை தெரிவித்து ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்

இதன் மூலம் ரேஷன் பொருட்கள் தொடர்பான இந்த விவகாரம் தற்போது  ஒரு முற்றுபுள்ளி பெற்று உள்ளது