தடுப்பூசி போட்டா 40 இன்ச் எல்இடி டிவி… அதுவும் 3.. அதிரடி காட்டிய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் மூலமாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
ஆனாலும் மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் முக்கிய அம்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்காக இந்த அறிவிப்பை ஆட்சியர் அமர் குஷ்வா வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நாளை நடைபெறும் 5வ தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் 3 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 40 இன்ச் எல்இடி கலர் டிவி தரப்படும். இதற்காக 3 டிவிக்கள் வாங்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.