திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபெற உள்ள அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணம் காரணமாக் 5 நாட்கள் தரிசன சேவை ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த இந்த விழா வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி முதல் 16 வரை நடைப்பெற உள்ளது.

இந்த நாட்களில் அர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டு விட்டது.மேலும் இந்த ஐந்து  நாட்களில் தரிசன சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி மஹாசாந்தி திருமஞ்சனம்

ஜூலை 20ஆம் தேதி முதல் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்திற்காக பரகாமணி சேவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் வரும் ஆகஸ்ட் 8 ஆம்  தேதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் கோயிலில் பணி புரியும் நபர்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையில் பொதுவாகவே திருப்பதி செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்து நாட்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.