Asianet News TamilAsianet News Tamil

மதுரை ஆதினத்திற்கு சிக்கல்..! நித்யானந்தாவுக்கு அடிக்குது ஜாக்பாட்..!

மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் இன்று 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.

There is a jackpot for nithyananda regarding madurai atheenam
Author
Chennai, First Published Sep 26, 2018, 8:01 PM IST

மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் இன்று 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.

மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கு சில ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. அதில், மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இது குறித்த விசாரணை இன்று நீதிபதி எம்.வி. முரளிதரன் அமர்வுக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறநிலைய துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வில்லை என  பாய்ன்ட் செய்து பேசினார்.

There is a jackpot for nithyananda regarding madurai atheenam

எனவே கிழமை நீதிமன்றத்தின் உத்தவரை ரத்து செய்து, நித்யானந்தாவிற்கு சாதகமான தீர்ப்பை  வழங்கினார். அதாவது, மதுரை புதிய ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

There is a jackpot for nithyananda regarding madurai atheenam

தற்போது, 292 வது குரு மகா சன்னிதானமாக அருணகிரி நாதர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த படியாக, மதுரை ஆதனத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

There is a jackpot for nithyananda regarding madurai atheenam

மதுரை ஆதீனம், 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios