10 & +2 மாணவர்களா நீங்கள்..? உங்களுக்கான 'சூப்பர்' செய்தி இதோ.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!
10 மற்றும் 12 மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த முதல் திருப்புதல் தேர்வு முடிவடைந்துள்ளது. இந்த தேர்வில் பல்வேறு பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் வெளியானது. இதையொட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து வரிசையாக சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில்,மாணவர்களை தயார் படுத்தவே திருப்புதல் தேர்வு என்றும்,அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எனவே,வினாத்தாள்கள் கசிவு குறித்து மாணவர்கள்,பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்,அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக தெரிவித்துள்ளது.