ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆலய கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் தரிசனம் செய்த வீடியோ!

ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா பக்தர்கள் பெரும் அளவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

First Published Dec 13, 2018, 5:44 PM IST | Last Updated Dec 13, 2018, 5:44 PM IST

ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா பக்தர்கள் பெரும் அளவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் பகுதியில் கட்டப்பட அருள்மிகு ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா ஆலய விடியற்காலையில் மங்கள இசையுடன் முதற் கடவுள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து அதன் பின்னர் யாக வேள்வி அமைத்து அருள்மிகு ஸ்ரீ வெங்கடேசபெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

பிறகு திருக்கோயில் மீது கலசம் அமைத்து பல்வேறு ஆற்றுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர் வெங்கடேசபெருமாள் சாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி அருள் பெற்று சென்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Video Top Stories