ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்..! நீதிமன்றம் அதிரடி..! 

ஜாக்ட்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள்  உடனடியாகவோ அல்லது  ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. 

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்தத்தை அடுத்து, மருத்துவ விடுப்பு தவிர அரசு ஊழியர்களுக்கு வேறு எந்த விடுப்பும் கிடையாது என ஏற்கனவே தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

பழைய பென்‌ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள விதிகளில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

இதற்கிடையில் தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியமும், விடுப்பும் கிடையாது என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜாக்ட்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள்  உடனடியாகவோ அல்லது  ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்து உள்ளது.