இயக்குனர் இமையம், பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் குடி போதையில் கார் ஓட்டியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவருடைய சொகுசு காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதை களங்களை கொண்ட கிராமத்து கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் இயக்குனர் பாரதி ராஜா. 

இவர் பிரபலமான அளவிற்கு ஏனோ இவருடைய மகனால் பிரபலமாக முடிய வில்லை. 'தாஜ்மகால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து 'சமுத்திரம்' , ' 'கடல் பூக்கள்' , 'வருஷமெல்லாம் வசந்தம்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என பெயர் பெற்றார். 

ஆனால், கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளியான 'அன்னக்கொடி' , 'வாய்மை' உள்ளிட்ட படங்கள் சரியாக போகாததால் தற்போது புது படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் உள்ளார். 

இந்நிலையில், இவர் பட்ட பகலில் குடி போதையில் நுங்கம்பாகம், ஸ்டெர்லின் சாலை அருகே வந்த போது போலீசாரிடம் சிக்கினார். இதை தொடர்ந்து போலீசார் இவருடைய BMW காரை பறிமுதல் செய்து இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுவரை இரவு நேரங்களில் மட்டும் தான், மது அருந்திவிட்டு கார் ஓட்டுகிறார்களா...? என கண்காணித்து வந்த போலீசார் தற்போது பகலிலும் தீவிரமாக கண்காணிக்க துவங்கியது எப்போது என பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. எனவே பகலில் மது அருந்திவிட்டு அதிர்ஷ்டவசமாக தப்பித்து வந்தவர்கள் இனி தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

இதனை நிரூபிக்கும் விதத்தில், தற்போது முதல் ஆளாக நடிகர் மனோஜ் போலீசாரிடம் சிகியுள்ளார். 

மேலும் நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே மக்களே கொஞ்சம் உஷாராக இருங்க.