தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்த விவரங்கள் இந்த செய்தித்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 3.00 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது. சென்னையில் உள்ள 200 இடங்களில் திமுக 20 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆவடியில் 48 இடங்களில் திமுக 18, அதிமுக 2 சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. தாம்பரத்தில் 70 இடங்களில் திமுக 21, பாஜக 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் 51 இடங்களில் திமுக 18, அதிமுக 4, பாஜக 1, பாமக 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வேலூரில் 60 இடங்களில் திமுக 20, அதிமுக 4, பாமக 1, சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

ஓசூரில் 51 இடங்களில் திமுக 19, அதிமுக 6, பாமக 1, சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடலூரில் 45 இடங்களில் திமுக 24, அதிமுக 6, பாஜக 1, பாமக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

திருப்பூரில் 60 இடங்களில் திமுக 14, அதிமுக 8, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

கோயம்புத்தூரில் 100 இடங்களில் திமுக 39, அதிமுக 1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கரூரில் 48 இடங்களில் திமுக 27, அதிமுக 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோட்டில் 60 இடங்களில் திமுக 22, அதிமுக 2, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சிராப்பள்ளியில் 65 இடங்களில் திமுக 34, அதிமுக 1, அமமுக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூரில் 51 இடங்களில் திமுக 21, அதிமுக 5, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கும்பகோணத்தில் 45 இடங்களில் திமுக 42, அதிமுக 3, சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

திண்டுக்கல்லில் 50 இடங்களில் திமுக 23, அதிமுக 2, பாஜக 1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மதுரையில் 100 இடங்களில் திமுக 36, அதிமுக 9, பாஜக 1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சிவகாசியில் 48 இடங்களில் திமுக 24, அதிமுக 9, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் 60 இடங்களில் திமுக 50, அதிமுக 6, சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திருநெல்வேலியில் 55 இடங்களில் திமுக 20, அதிமுக 3, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாகர்கோவிலில் 52 இடங்களில் திமுக 26, பாஜக 7, அதிமுக 2, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சேலத்தில் 60 இடங்களில் திமுக 33, அதிமுக 4, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.