பரமக்குடியில்  வெற்றி கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசு தீவிபத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துவக்கம் முதலே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதும் தேர்தல் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

பரமக்குடியில் போட்டியில் மதிமுக கட்சி வேட்பாளர் குணா வெற்றி பெற்றார். இவரது வெற்றியை கொண்டாட பட்டாசு வெடித்தனர். அப்போது அருகில் இருந்த பந்தல் தீப்பிடித்த எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

வெற்றி கொண்டாட்டத்தின் போது தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுக்க பெரும்பாலான பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது.