Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா..! தமிழகத்தில் இன்றும் குறைந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Tamilnadu corona latest
Author
Chennai, First Published Oct 6, 2021, 9:07 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Tamilnadu corona latest

தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றும் விவரங்களை வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 26,72,84 ஆக இருக்கிறது.

Tamilnadu corona latest

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதையடுத்து ஒட்டு மொத்த உயிரிழப்பு 35,707 ஆக உள்ளது. இன்று மட்டும் 1519 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

 இன்னமும 16,637 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 26,20,499 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios