அப்பாடா…! இன்னிக்கும் சந்தோஷம்தான்…! கொரோனாவின் லேட்டஸ்ட் தகவல்
தமிழகத்தில் இன்று 1140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 1140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பாதிப்புகள் கட்டுக்குள் இருக்கின்றன.
இந் நிலையில் தமிழகத்தில் இன்று 1140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று 1140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 632 பேர் ஆண்கள், 508 பேர் பெண்கள். ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 26,94,89 ஆக உள்ளது.
13,280 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 17 பேர் பலியாகி இருக்கின்றனர். 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர்.
1374 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 26,44,805 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.