இன்று எத்தனை பேருக்கு கொரோனா…? சுகாதாரத்துறையின் லேட்டஸ்ட் அறிவிப்பு
தமிழகத்தில் 1152 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 1152 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. நாள் தோறும் பதிவாகும் பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1152 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பின் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் 1152 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பாதிப்பில் இருந்து 1392 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
ஒரே நாளில் 19 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்று மட்டும் 1,29,573 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இன்னமும் 13,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 26,92,949 ஆக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.