Asianet Tamil News live : சேலத்தில் புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

Tamil News live updates today on November 20 2022

சேலத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாநகராட்சி திடலில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 210 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தக கணகாட்சியை அமைச்சர் கே.என்.என்.நேரு தொடங்கி வைத்தார். 

6:22 PM IST

ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவு.. ஃபேன்ஸிடம் நடிகர் விஜய் சொன்ன அந்த முக்கியமான 2 விஷயம் என்ன?- முழு விவரம் இதோ

நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதோடு அவர்களிடன் 2 முக்கியமான விஷயங்களையும் கூறி உள்ளார். மேலும் படிக்க

4:55 PM IST

வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை யாருக்கு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

4:18 PM IST

2 முறை கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை... மாரடைப்பால் பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பிரபல நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:34 PM IST

விஜய் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வருகை

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வருகை. இன்னோவா காரில் வந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2:07 PM IST

ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்... டுவிட்டரில் டிரெண்டாகும் பனையூர் பிரியாணி

விஜய் ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டரில் பனையூர் பிரியாணி என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  மேலும் படிக்க

1:23 PM IST

அட்ராசக்க... தளபதி 67-னும் LCU படம் தானாம் - மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர்... குஷியான விஜய் ரசிகர்கள்

தளபதி 67 திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் எனப்படும் LCU-வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார். மேலும் படிக்க

12:55 PM IST

ஆளுநர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்..! முதலமைச்சர்களை அவமதிக்கும் செயல்..! திருமாவளவன் ஆவேசம்

சாதிப் பஞ்சாயத்துகளை சனநாயக அமைப்புகள் என்பதா? யு.ஜி.சி தலைவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

12:32 PM IST

குஸ்தி வீரனாக கோதாவில் இறங்கிய விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி டிரைலர்

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்படும் என்றும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த படக்குழு, தற்போது அப்படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளது. மேலும் படிக்க

12:10 PM IST

தனி தமிழ்நாடு கோரிக்கை..! திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- ஹெச்.ராஜா ஆவேசம்

தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு  என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

11:52 AM IST

விஜய் டிவி பிரபலத்தை ரகசிய திருமணம் செய்துகொண்டார் குக் வித் கோமாளி ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ரித்திகா, விஜய் டிவி பிரபலம் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

11:07 AM IST

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்..! இரட்டை வேடம் போடும் திமுக..? ஆர் பி உதயகுமார் விமர்சனம்

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை திமுக அரசு மூழ்கடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:59 AM IST

இது குடும்ப விழா... மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பரிசுகளை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார். மேலும் படிக்க

10:41 AM IST

மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி

கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் திட்டமிட்ட சதி என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:07 AM IST

காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை - விலையும் கடுமையாக உயர்வு

சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டிய உள்ளது. வரத்து அதிகரித்த நிலையில், மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  வஞ்சிரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், வவ்வாள் மீன் ரூ.800-க்கும், சங்கரா மீன் ரூ.400-க்கும், நெத்திலி மீன் ரூ.250-க்கும், இறால் மீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

9:19 AM IST

இன்று ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்

நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் போன்ற காரணங்களாக கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்து வந்த அவர், இன்று அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார். நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.

9:12 AM IST

NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்..!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். மேலும் படிக்க

9:10 AM IST

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..? இரண்டு பேர் காயம்..! சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை

கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

9:09 AM IST

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜக மீது சீறும் மு.க.ஸ்டாலின்

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா..விழி! எழு! நட! என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

9:08 AM IST

ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் தான் கூட்டணி, கூட்டணியை முறித்திக் கொள்ள ஒரு காரணம் கூட இல்லையென ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

6:22 PM IST:

நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதோடு அவர்களிடன் 2 முக்கியமான விஷயங்களையும் கூறி உள்ளார். மேலும் படிக்க

4:55 PM IST:

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மேலும் படிக்க

4:18 PM IST:

இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பிரபல நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:34 PM IST:

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வருகை. இன்னோவா காரில் வந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2:07 PM IST:

விஜய் ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டரில் பனையூர் பிரியாணி என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  மேலும் படிக்க

1:23 PM IST:

தளபதி 67 திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் எனப்படும் LCU-வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார். மேலும் படிக்க

12:55 PM IST:

சாதிப் பஞ்சாயத்துகளை சனநாயக அமைப்புகள் என்பதா? யு.ஜி.சி தலைவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

12:32 PM IST:

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்படும் என்றும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த படக்குழு, தற்போது அப்படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளது. மேலும் படிக்க

12:10 PM IST:

தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு  என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

11:52 AM IST:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ரித்திகா, விஜய் டிவி பிரபலம் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

11:07 AM IST:

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை திமுக அரசு மூழ்கடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:59 AM IST:

சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பரிசுகளை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார். மேலும் படிக்க

10:41 AM IST:

கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் திட்டமிட்ட சதி என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:07 AM IST:

சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டிய உள்ளது. வரத்து அதிகரித்த நிலையில், மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  வஞ்சிரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், வவ்வாள் மீன் ரூ.800-க்கும், சங்கரா மீன் ரூ.400-க்கும், நெத்திலி மீன் ரூ.250-க்கும், இறால் மீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

9:19 AM IST:

நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் போன்ற காரணங்களாக கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்து வந்த அவர், இன்று அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார். நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.

9:12 AM IST:

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். மேலும் படிக்க

9:10 AM IST:

கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

9:09 AM IST:

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா..விழி! எழு! நட! என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

9:08 AM IST: