Asianet Tamil News Live: தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் First Single நாளை வெளியாகிறது

Tamil News live updates today on november 09 2022

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் First Single வா வாத்தி என்ற பாடல் நாளை வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில், ஸ்வேதா மோகன் பாடியுள்ள இப்பாடலை, தனுஷ் எழுதியுள்ளார்.

10:38 PM IST

நீட் முதுகலை தேர்வு 2023ம் ஆண்டு வரைக்கும் மட்டுமே.. அடுத்து நெக்ஸ்ட் தேர்வு வருகிறது - முழு விபரம்

நீட் முதுகலை தேர்வானது 2023ம் ஆண்டு நடைபெறுவது கடைசி தேர்வாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:18 PM IST

2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம். அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான் என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:56 PM IST

காதலியுடன் தொடர்பு.. நண்பனின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி வீசிய நண்பன் - பரபரப்பு சம்பவம்

21 வயது ஓட்டல் உரிமையாளரின் அந்தரங்க உறுப்புகளை அறுத்து, 9 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:06 PM IST

அமைச்சருக்கு அங்கு என்ன வேலை.. நடையை கட்டு.!! அமைச்சர் சேகர்பாபுவை எச்சரிக்கும் பாஜக எச்.ராஜா

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

7:22 PM IST

கமலா ஹாரிஸ் மட்டுமா.! அமெரிக்க இடைத்தேர்தலில் அசத்திய இந்தியர்கள் !! யார் யார் தெரியுமா ?

ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி,ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் உட்பட நான்கு அமெரிக்க வாழ் இந்திய அரசியல்வாதிகள் புதன்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் மாநில ஆளுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

6:56 PM IST

நீங்க 2 பேருமே லெஸ்பியன்ஸ்! சந்தேகத்தில் 2 பெண்களை கொடூரமாக தாக்கிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் லெஸ்பியன்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்களை மூன்று ஆண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

6:13 PM IST

மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

தமிழ்நாடு அரசு தற்போது மின் கட்டணம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:41 PM IST

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து சாதனை படைத்த கோவை பெண்.. குவியும் பாராட்டுகள் !!

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு உணவளிக்க கோவை பெண் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்துள்ளார்.

மேலும் படிக்க

4:59 PM IST

நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

மதுரைக்கு நவம்பர் 11ம் தேதி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.

மேலும் படிக்க

3:38 PM IST

தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:04 PM IST

காங்கிரசால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது.! இமாச்சல பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு !

காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வளர்ச்சி பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க

2:59 PM IST

தனியார் மூலம் அரசு பணிக்கு ஆட்கள் நியமனம்.? இறங்கி அடித்த எதிர்கட்சிகள்.! ரத்து செய்து பின் வாங்கிய தமிழக அரசு

அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க..

1:48 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட செல்போன் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தமிழக அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

1:47 PM IST

உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள்  தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

1:43 PM IST

அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி... பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி உதை..!

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கடந்த வாரம் சக்சஸ் பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பொன்னியின் செல்வனில் நடித்த நட்சத்திரங்களும், அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம், நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரபலங்கள் புடைசூழ நடந்த இந்த சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

12:07 PM IST

136 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை..! இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளநிலையில், முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

11:02 AM IST

விஜய் படத்துக்கே தண்ணிகாட்டிய தனுஷின் பொல்லாதவன்... ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக்வெட்டி கொண்டாடிய படக்குழு

பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் ஆகியோர் அப்படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

10:28 AM IST

வங்க கடலில் புதிய புயல் சின்னம்..! நாளை முதல் மிக கன மழை..! எந்த எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை என தெரியுமா.?

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

9:58 AM IST

வாக்கிங் சென்ற கேபிள் டி.வி. ஆபரேட்டர் வெட்டி படுகொலை.. 6 பேர் அதிரடி கைது.. இது தான் காரணமா?

திருச்சி அருகே நடைபயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்த கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

9:27 AM IST

நெருங்கும் தீர்ப்பால் அலறும் எஸ்.பி.வேலுமணி.. கோர்ட்டில் நடந்த காரசார வாதம்..!

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

மேலும் படிக்க

8:55 AM IST

தமிழகத்தில் 5 இடங்களில் மண்டல மாநாடு..? தொண்டர்களை திரட்டி இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளிக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ்

அதிமுகவில் தனக்கு உள்ள பலத்தை காட்டும் வகையில் சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட 5 மண்டலங்களில் மாநாடு நடத்த ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..

8:50 AM IST

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

8:22 AM IST

நம்பினேன்.. நீங்க கைவிடல! இது கனவா.. நிஜமானு தெரியல - ‘லவ் டுடே’வின் வேறலெவல் ஹிட் குறித்து பிரதீப் நெகிழ்ச்சி

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் பிரதீப், லவ் டுடே வெற்றிக்கு நன்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

8:05 AM IST

தமிழகத்தில் 10% என்பது அதீத இட ஒதுக்கீடு.! 8 லட்சம் என்ற ஆண்டு வருமான வரம்பை குறைக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லையென தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்கு 10 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

7:55 AM IST

அரசியல் சட்டத்தின் இதயத்தில் அடிப்பதுபோல் உள்ளது! இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு! துரைமுருகன்

அரசியல்சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள். அரசியல்சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள்.

மேலும் படிக்க

7:26 AM IST

நள்ளிரவில் டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்.. தூக்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம்.!

நள்ளிரவில் தலைவர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். 

மேலும் படிக்க

7:25 AM IST

அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு.. டிடிவி.தினகரன் விளாசல்..!

தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:38 PM IST:

நீட் முதுகலை தேர்வானது 2023ம் ஆண்டு நடைபெறுவது கடைசி தேர்வாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:18 PM IST:

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம். அவர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான் என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:56 PM IST:

21 வயது ஓட்டல் உரிமையாளரின் அந்தரங்க உறுப்புகளை அறுத்து, 9 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:06 PM IST:

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

7:22 PM IST:

ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி,ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் உட்பட நான்கு அமெரிக்க வாழ் இந்திய அரசியல்வாதிகள் புதன்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் மாநில ஆளுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

6:56 PM IST:

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் லெஸ்பியன்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்களை மூன்று ஆண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

6:14 PM IST:

தமிழ்நாடு அரசு தற்போது மின் கட்டணம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

5:41 PM IST:

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு உணவளிக்க கோவை பெண் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்துள்ளார்.

மேலும் படிக்க

4:59 PM IST:

மதுரைக்கு நவம்பர் 11ம் தேதி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.

மேலும் படிக்க

3:38 PM IST:

ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:04 PM IST:

காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வளர்ச்சி பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க

2:59 PM IST:

அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க..

1:48 PM IST:

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட செல்போன் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தமிழக அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

1:47 PM IST:

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள்  தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

1:43 PM IST:

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கடந்த வாரம் சக்சஸ் பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பொன்னியின் செல்வனில் நடித்த நட்சத்திரங்களும், அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம், நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரபலங்கள் புடைசூழ நடந்த இந்த சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

12:07 PM IST:

வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளநிலையில், முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

11:02 AM IST:

பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் ஆகியோர் அப்படம் ரிலீசாகி 15 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

10:28 AM IST:

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

9:58 AM IST:

திருச்சி அருகே நடைபயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்த கேபிள் டிவி உரிமையாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

9:27 AM IST:

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

மேலும் படிக்க

8:55 AM IST:

அதிமுகவில் தனக்கு உள்ள பலத்தை காட்டும் வகையில் சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட 5 மண்டலங்களில் மாநாடு நடத்த ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..

8:50 AM IST:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

8:22 AM IST:

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் பிரதீப், லவ் டுடே வெற்றிக்கு நன்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

8:05 AM IST:

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லையென தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்கு 10 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க..

7:55 AM IST:

அரசியல்சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள். அரசியல்சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள்.

மேலும் படிக்க

7:26 AM IST:

நள்ளிரவில் தலைவர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். 

மேலும் படிக்க

7:25 AM IST: