Tamil News live : பற்றி எரியும் இலங்கை..கொந்தளிக்கும் இலங்கை மக்கள்.. அதிபர் ஓட்டம் !

Tamil News live updates today on july 9 2022

 இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலமாக தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிபர் மாளிகைக்குள் இருந்த நீச்சல் குளத்திலும் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தனா தெரிவித்துள்ளார். 

8:27 AM IST

குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..

தற்போது வைரலாகி வரும் நயன்- விக்கி திருமண புகைப்படங்கள்  குறித்து இங்கு பார்க்கலாம்...

மேலும் படிக்க .... குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் .

7:47 AM IST

ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஈகை திருநாளில் ஏசியா நெட்டின் வாழ்த்துக்களுடன்.. பிரபலங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க.. ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

7:41 AM IST

ஜெர்மனி, இந்தியாவுக்கான தூதர்களை பணிநீக்கம் செய்த ஜெலன்ஸ்கி.. ஏன் தெரியுமா?

உலகின் பல்வேறு நாடுகளுக்கு உக்ரைன் நாட்டுக்கான தூதர்களாக இருந்தவர்களை பணி செய்து விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். ஜெர்மனி நாட்டுக்கான உக்ரைன் தூதரும் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க

11:50 PM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா

அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:48 PM IST

கொளுந்து விட்டு எரியும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீடு

அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

மேலும் படிக்க

11:47 PM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

கோத்தபய ராஜபக்சேவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

11:46 PM IST

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும்.. தொடரும் போராட்டம்

கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. 

மேலும் படிக்க

11:44 PM IST

ரணில், கோத்தபய ராஜபக்ச பதவி விலகணும் - எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதேஸா காட்டம்

போராட்டம் தீவிரமாகும் என்பதை முன்பே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று இரவே அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கையில் நிலவும் அசாதாரண நிலை குறித்து அவசரமா ஆலோசிக்க அமைச்சரவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரியுள்ளார். 

மேலும் படிக்க

11:42 PM IST

இலங்கை மக்களுக்கு உதவுங்கள்.. ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல், மக்களின் துன்பங்களைக் களைய உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

11:41 PM IST

மக்களுக்குப் பயந்து தப்பியோடிய இலங்கை ராஜதந்திரி கோத்தபய ராஜபக்ச

இலங்கை போலீஸாரின் தடுப்புகளை மீறி,  அதிபர் மாளிகைக்குள் மக்கள் படையெடுத்தனர். அதிபர் மாளிகைக்குள் படையெடுத்த மக்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். 

மேலும் படிக்க

11:39 PM IST

அதிபர் கொடி அகற்றம்.. இலங்கையில் தொடரும் போராட்டம்

போரட்டக்காரர்கள் யாரும் கோத்தபய ராஜபக்சே இல்லத்துக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்ட போதிலும் போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். 

மேலும் படிக்க

11:37 PM IST

இலங்கையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே

அதிபர் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். ஆனால், கோத்தபய ராஜபக்சே அங்கு இல்லை. நேற்று இரவே அவர் தனது இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டதாக செய்தி வெளியானது. அவர் ராணுவ தலைமையகத்தில் இருப்பதாகவும், இல்லை நாட்டை விட்டே கடல் மார்க்கமாக தப்பி விட்டார் என்றும் இரண்டு விதமாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க

11:34 PM IST

கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!

அதிபர் வீடு உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டக்காரர்களை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அத்துடன், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது. 

மேலும் படிக்க

10:47 PM IST

நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...

நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக துவங்கியுள்ளது அந்த வகையில் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா - ஜோதிகா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...

10:34 PM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13-ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

10:31 PM IST

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

மேலும் படிக்க

8:03 PM IST

நான்கு நடிகர்கள் நடிப்பில் முழு நீல தில்லைராக உருவாகும் 'விடியும் வரை காத்திரு'!!

சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடியும் வரை காத்திரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் செய்திகள்... 

7:37 PM IST

ஆளே மாறிப்போய் வித்தியாசமாக இருக்கும் அதுல்யா! மூஞ்சில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? ஷாக்கிங் போட்டோஸ்!

 நடிகை அதுல்யாவும் தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவும், பிளாஸ்டிக் மூஞ்சி என பதிவிட்டு வருகிறார்கள். புகைப்படங்களை பார்க்க... 
 
6:20 PM IST

விக்ரம், தர்பார், கைதி என 'போதை பொருளை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய 10 தமிழ் படங்கள்.!

தமிழ் சினிமாவில் திரில்லர், காமெடி, ஹாரர், என பல ஜெர்னர்களில் படம் எடுக்கப்பட்டு வந்தாலும்.. போதைப் பொருளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழில் போதை பொருள் கதையை மையமாக வைத்து இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் முக்கிய 10 படங்களின் பட்டியல் இதோ...
 
5:17 PM IST

மக்களே உஷார்!! மழைநீர் வடிகால் பணிகள்.. முக்கிய சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள்..மாநகராட்சி புது உத்தரவு

சென்னை மாநகராட்சியில் இதுவரை மழைநீர் வடிகால் பணிகளைத் தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும்போது, பள்ளங்கள் தோண்டப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் பள்ளங்கள் தோண்டப்படும் போது அருகிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:09 PM IST

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தள்ளி வைப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4:36 PM IST

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி

காலியாக 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
4:32 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  புகாரை திரும்பப்பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4:13 PM IST

அவர்கள் ”ஆன்மீகவியாதிகள்”.. மலிவான விளம்பரம்‌ தேடும்‌ பொய்யர்கள் பற்றி கவலையில்லை.. ஸ்டாலின் காட்டம்

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மீகவியாதிகள்; ஆன்மீக போலிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யும்‌ புரட்டும்‌ மலிவான விளம்பரம்‌ தேடும்‌ வீணர்களைப்‌ பற்றி எனக்கு கவலையில்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

3:57 PM IST

பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா? ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.. வெளியான ஆச்சர்ய தகவல்!

இயக்குனர் மணிரத்தினம் மிக பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாக ஆச்சர்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:57 PM IST

வாவ்... திருமணமான இரண்டு மாதத்திற்குள்... சூப்பர் சிங்கர் அஜய் - ஜெர்ஸி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா மற்றும் இவரது காதலி ஜெர்சிக்கு திருமணம் ஆகி 45 நாட்களே ஆகும் நிலையில், இவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:08 PM IST

அனிரூத்தின் அக்காவா இது? சும்மா சினிமா ஹீரோயின் போல் இருக்காங்களே..! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிரூத்தின் சகோதரி புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...
 
2:00 PM IST

அலர்ட் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை.. இன்று இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:30 PM IST

ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்

பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

மேலும் படிக்க

1:17 PM IST

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

1:05 PM IST

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ”ஆன்மீகவியாதிகள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் கிடையாது. அவர்கள் ஆன்மீகவியாதிகள், ஆன்மீக போலீகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யர்கள், புரட்டர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதர்களை பிளவுப்படுத்த மதத்தை பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

12:45 PM IST

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. தொழிலதிபர் செந்தில்குமாரிடம் 3 வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனும் தொழிலதிபருமான செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் 3 வது நாளாக விசாரனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமிக்கு சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் கோடநாடு எஸ்டெட் தொடர்பாக சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் அது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:34 PM IST

களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை.. மத நல்லிணக்கதை பறைசாற்றும் ஈகை திருநாள் கூறுவது என்ன..?

இஸ்லாமிய மக்களால் நாளைய தினம் ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் ஆடுகள் குர்பனி கொடுக்கப்பட்டு, இறைச்சிகளை அண்டை வீட்டாருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பகிரிந்து அளிப்பது வழக்கம். இதனால் தமிழகம் முழுவதும்  கால்நாடை சந்தைகளில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.

12:18 PM IST

பெளர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும் படிக்க

12:17 PM IST

சாய்பல்லவிக்கு வந்த சோதனை... நீதிமன்ற தீர்ப்பால் செம்ம அப்செட்!!

நடிகை சாய் பல்லவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் படிக்க... 

11:54 AM IST

இபிஎஸ் ஆதரவாளர்கள் எண்ணிக்கை உயர்வு..

தேனி மாவட்டத்திலிருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது. 

11:51 AM IST

திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைகிறாரா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கடலுார் எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பன் விளக்கமளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:28 AM IST

அலர்ட் !! நாளை மறுநாள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.. எந்த ஊர் தெரியுமா..?

நெல்லையப்பர் கோவில் ஆனிபெருத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் ( ஜூலை 11 ஆம் தேதி) நடைபெறவுள்ளதால், அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
11:28 AM IST

கோவை செல்வராஜ் ஒரு அம்பு; ஓபிஎஸ் தான் ஏவி விடுகிறார் - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கோவை செல்வராஜ் ஒரு அம்பு. அவரை ஓபிஎஸ் தான் ஏவி விடுகிறார் என்று இபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார். நேற்று அதிமுகவின் ரகசியங்களை திமுகவிற்கு கே.பி.முனுசாமி தான் சொல்கிறார் என்று கோவை செல்வராஜ் குற்றச்சாட்டிய நிலையில் அதற்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.

11:18 AM IST

80-வது மணிவிழாவிற்கு விஜய் வராததற்கு இது தான் காரணம்! எஸ்.ஏ.சி சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் (vijay) , அண்மையில் நடந்த தன்னுடைய பெற்றோரின் 80-வது மணிவிழாவில் கலந்து கொள்ளாததற்கு நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்த நிலையில், எஸ்.ஏ.சி விஜய் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க... 

11:14 AM IST

முதலில்ல நுபுர் சர்மாவை கைது பண்ணுங்க.. அப்புறம் லீனா மணிமேகலை கிட்ட வாங்க.. ஓங்கி அடிக்கும் முத்தரசன்.

காளியை இழிவு செய்து விட்டார் என லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்துபவர்கள் நபிகள் நாயகம் குறித்து விமர்சித்த நுபுர் சர்மாவை   ஏன் கைது செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி பதவி இளையராஜாவுக்கு பொருத்தமானதுதான் என தெரிவித்துள்ள அவர், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதால்தான் அவரை விமர்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST

மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாளாகும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும் படிக்க

10:19 AM IST

அய்யோ ஆண்டவா.. இந்தியாவிலும் நுழைந்தது குரங்கு காய்ச்சல்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்.

பல நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் முதல் முறையாக  கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்த  வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இது குரங்கு அம்மையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் படிக்க

9:56 AM IST

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.. பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதில், பலர் மாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

9:41 AM IST

என்ன லவ் பண்ணிட்டு.. வேறு ஒருத்தவன் கூட நிச்சயதார்த்தம் பண்ணுவியா.. காதலி துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை

காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதால் ஆத்திரத்தில் இருந்த காதலன் காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:17 AM IST

பொதுக் குழுவை தூக்கி ஓரம்போடு... எடப்பாடி தலைமீது தொங்கும் கத்தி.. 11 ஆம் தேதி நடக்கப்போகும் டுவிஸ்ட். ??

எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற துடித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.மேலும் படிக்க  

8:50 AM IST

கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..

அதிபர் வீட்டின் அருகே பொதுமக்கள் போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என்று இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:26 AM IST

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூலை 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழ்நாடு ேதர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

8:23 AM IST

கர்நாடகாவில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவு

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7:50 AM IST

பொதுக்குழு 9.30 மணிக்கு.. தீர்ப்பு 9 மணிக்கு.. நீதிபதி வைத்த செம்ம ட்விஸ்ட்.. பீதியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் காலை 9 மணிக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:49 AM IST

எனக்கு பல கோடி கடன் இருக்கு.. முன்னாள் அமைச்சர் காமராஜ்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:32 AM IST

அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவம் தொடர்பாக 2 ஊழியர் சஸ்பெண்ட்

திருவாரூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன், பொறியாளர் அசோகன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

8:27 AM IST:

தற்போது வைரலாகி வரும் நயன்- விக்கி திருமண புகைப்படங்கள்  குறித்து இங்கு பார்க்கலாம்...

மேலும் படிக்க .... குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் .

7:47 AM IST:

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஈகை திருநாளில் ஏசியா நெட்டின் வாழ்த்துக்களுடன்.. பிரபலங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க.. ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

7:42 AM IST:

உலகின் பல்வேறு நாடுகளுக்கு உக்ரைன் நாட்டுக்கான தூதர்களாக இருந்தவர்களை பணி செய்து விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். ஜெர்மனி நாட்டுக்கான உக்ரைன் தூதரும் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க

11:50 PM IST:

அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:48 PM IST:

அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

மேலும் படிக்க

11:47 PM IST:

கோத்தபய ராஜபக்சேவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

11:46 PM IST:

கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. 

மேலும் படிக்க

11:44 PM IST:

போராட்டம் தீவிரமாகும் என்பதை முன்பே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று இரவே அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கையில் நிலவும் அசாதாரண நிலை குறித்து அவசரமா ஆலோசிக்க அமைச்சரவையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரியுள்ளார். 

மேலும் படிக்க

11:42 PM IST:

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல், மக்களின் துன்பங்களைக் களைய உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

11:41 PM IST:

இலங்கை போலீஸாரின் தடுப்புகளை மீறி,  அதிபர் மாளிகைக்குள் மக்கள் படையெடுத்தனர். அதிபர் மாளிகைக்குள் படையெடுத்த மக்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். 

மேலும் படிக்க

11:39 PM IST:

போரட்டக்காரர்கள் யாரும் கோத்தபய ராஜபக்சே இல்லத்துக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்ட போதிலும் போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். 

மேலும் படிக்க

11:37 PM IST:

அதிபர் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். ஆனால், கோத்தபய ராஜபக்சே அங்கு இல்லை. நேற்று இரவே அவர் தனது இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டதாக செய்தி வெளியானது. அவர் ராணுவ தலைமையகத்தில் இருப்பதாகவும், இல்லை நாட்டை விட்டே கடல் மார்க்கமாக தப்பி விட்டார் என்றும் இரண்டு விதமாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க

11:34 PM IST:

அதிபர் வீடு உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டக்காரர்களை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அத்துடன், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது. 

மேலும் படிக்க

10:47 PM IST:

நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக துவங்கியுள்ளது அந்த வகையில் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா - ஜோதிகா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...

11:16 PM IST:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 13-ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

10:31 PM IST:

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், கொழும்பு முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. அதிபர் மாளிகை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீவைத்துள்ளனர்.

மேலும் படிக்க

8:03 PM IST:

சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு 'விடியும் வரை காத்திரு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் செய்திகள்... 

7:37 PM IST:

 நடிகை அதுல்யாவும் தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவும், பிளாஸ்டிக் மூஞ்சி என பதிவிட்டு வருகிறார்கள். புகைப்படங்களை பார்க்க... 
 
6:19 PM IST:

தமிழ் சினிமாவில் திரில்லர், காமெடி, ஹாரர், என பல ஜெர்னர்களில் படம் எடுக்கப்பட்டு வந்தாலும்.. போதைப் பொருளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரில்லர் மற்றும் ஆக்சன் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தமிழில் போதை பொருள் கதையை மையமாக வைத்து இதுவரை வெளியான முன்னணி நடிகர்களின் முக்கிய 10 படங்களின் பட்டியல் இதோ...
 
5:17 PM IST:

சென்னை மாநகராட்சியில் இதுவரை மழைநீர் வடிகால் பணிகளைத் தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும்போது, பள்ளங்கள் தோண்டப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் பள்ளங்கள் தோண்டப்படும் போது அருகிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

5:09 PM IST:

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4:36 PM IST:

காலியாக 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
4:32 PM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,  புகாரை திரும்பப்பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4:13 PM IST:

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மீகவியாதிகள்; ஆன்மீக போலிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யும்‌ புரட்டும்‌ மலிவான விளம்பரம்‌ தேடும்‌ வீணர்களைப்‌ பற்றி எனக்கு கவலையில்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

3:57 PM IST:

இயக்குனர் மணிரத்தினம் மிக பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாக ஆச்சர்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:57 PM IST:

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா மற்றும் இவரது காதலி ஜெர்சிக்கு திருமணம் ஆகி 45 நாட்களே ஆகும் நிலையில், இவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 
 
2:08 PM IST:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிரூத்தின் சகோதரி புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...
 
2:00 PM IST:

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:30 PM IST:

பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

மேலும் படிக்க

1:17 PM IST:

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

1:05 PM IST:

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் கிடையாது. அவர்கள் ஆன்மீகவியாதிகள், ஆன்மீக போலீகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யர்கள், புரட்டர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதர்களை பிளவுப்படுத்த மதத்தை பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

12:45 PM IST:

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனும் தொழிலதிபருமான செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் 3 வது நாளாக விசாரனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமிக்கு சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் கோடநாடு எஸ்டெட் தொடர்பாக சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் அது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:34 PM IST:

இஸ்லாமிய மக்களால் நாளைய தினம் ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் ஆடுகள் குர்பனி கொடுக்கப்பட்டு, இறைச்சிகளை அண்டை வீட்டாருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பகிரிந்து அளிப்பது வழக்கம். இதனால் தமிழகம் முழுவதும்  கால்நாடை சந்தைகளில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் விற்பனை களைக்கட்டியுள்ளது.

1:02 PM IST:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும் படிக்க

12:17 PM IST:

நடிகை சாய் பல்லவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் படிக்க... 

11:54 AM IST:

தேனி மாவட்டத்திலிருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது. 

11:51 AM IST:

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கடலுார் எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பன் விளக்கமளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:38 AM IST:

நெல்லையப்பர் கோவில் ஆனிபெருத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் ( ஜூலை 11 ஆம் தேதி) நடைபெறவுள்ளதால், அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
 
11:28 AM IST:

கோவை செல்வராஜ் ஒரு அம்பு. அவரை ஓபிஎஸ் தான் ஏவி விடுகிறார் என்று இபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார். நேற்று அதிமுகவின் ரகசியங்களை திமுகவிற்கு கே.பி.முனுசாமி தான் சொல்கிறார் என்று கோவை செல்வராஜ் குற்றச்சாட்டிய நிலையில் அதற்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.

11:18 AM IST:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் (vijay) , அண்மையில் நடந்த தன்னுடைய பெற்றோரின் 80-வது மணிவிழாவில் கலந்து கொள்ளாததற்கு நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்த நிலையில், எஸ்.ஏ.சி விஜய் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் படிக்க... 

11:14 AM IST:

காளியை இழிவு செய்து விட்டார் என லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்துபவர்கள் நபிகள் நாயகம் குறித்து விமர்சித்த நுபுர் சர்மாவை   ஏன் கைது செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி பதவி இளையராஜாவுக்கு பொருத்தமானதுதான் என தெரிவித்துள்ள அவர், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதால்தான் அவரை விமர்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST:

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாளாகும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும் படிக்க

10:19 AM IST:

பல நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் முதல் முறையாக  கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்த  வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இது குரங்கு அம்மையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் படிக்க

10:17 AM IST:

அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதில், பலர் மாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

9:41 AM IST:

காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதால் ஆத்திரத்தில் இருந்த காதலன் காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:17 AM IST:

எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற துடித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.மேலும் படிக்க  

8:50 AM IST:

அதிபர் வீட்டின் அருகே பொதுமக்கள் போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என்று இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:26 AM IST:

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூலை 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழ்நாடு ேதர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

8:23 AM IST:

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7:50 AM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் காலை 9 மணிக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:49 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:32 AM IST: