Asianet Tamil News Live: மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்!!

Tamil News live updates today on december 09 2022

மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது. புயல் கரையை கடப்பது 2 முதல் 3 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

12:29 AM IST

மாண்டஸ் புயலால் வீசிய பலத்த காற்று... சென்னை தங்கசாலையில் சிக்னல் கம்பம் சாய்ந்தது!!

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை தங்கசாலையின் புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் காற்றின் வேகத்தால் சாய்ந்து விழுந்தது. இதை அடுத்து அந்த கம்பத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

11:59 PM IST

கரையை கடக்க தொடங்கிய மாண்டஸ் புயல்... சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை!!

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன

11:47 PM IST

சென்னையில் இருந்து 70 கிமீ தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி... தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்!!

புயல் கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து மாண்டஸ் புயல் 70 கிமீ தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

11:40 PM IST

சென்னையை நெருங்கி வரும் மாண்டஸ் புயல்... பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை!!

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து விழுந்துள்ளன

9:38 PM IST

மாண்டஸ் புயல் எதிரொலி... ஈ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!!

மாண்டஸ் புயல் காரணமாகக் ஈ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

8:34 PM IST

மாண்டஸ் புயல் எச்சரிக்கை... காற்றின் வேகத்திற்கேற்ப மின்சாரம் நிறுத்தப்படும்... அறிவித்தது மின்வாரியம்!!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மின்வாரியம், புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

7:00 PM IST

மாண்டஸ் புயல் எதிரொலி... அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

5:41 PM IST

சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம்

சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 14 கி. மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தீவிர புயல் புயலாக மாறி, கரையைத் தொடும்போது 85 கி. மீட்டர் வேகத்தில் காற்று வீடும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைத் தொடும் என்று தெரிய வந்துள்ளது.

4:11 PM IST

மழையால் நாளையும் இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயலால் மழை பெய்து வருவதால் வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பரம் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை (10/12/2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

4:09 PM IST

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4:02 PM IST

நெருங்கி வரும் மாண்டஸ் புயல்

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே வங்கக் கடலில் 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2:07 PM IST

புதுச்சேரி - சென்னை இடையே பேருந்து சேவை ரத்து

புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

1:39 PM IST

சென்னை தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக மழை

சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை - 69 மி.மீ., பெரம்பலூர் மாநகராட்சி பூங்கா - 63 மி.மீ., டிஜிபி அலுவலகம் - 56 மி.மீ., எம்.ஜி.ஆர் நகர் - 51 மி.மீ, ஆலந்தூர் - 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

1:37 PM IST

கலங்கரை விளக்கத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

1:10 PM IST

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.... வடிவேலுவுக்கு கம்பேக் படமாக அமைந்ததா? இல்லை கவுத்திவிட்டதா?- டுவிட்டர் விமர்சனம் இதோ

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

1:09 PM IST

இரட்டை இலை சின்னம்..! ஓபிஎஸ் உரிமை கோர தடை விதிக்க வேண்டும்..! செக் வைத்த எடப்பாடி

தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது, எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

மேலும் படிக்க..

12:47 PM IST

தமிழகத்தில் இன்றிரவு அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என கூறப்பட்டுள்ளது. 

11:52 AM IST

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்.. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்..!

சென்னையில் கடல் சீற்றத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்தது. இது தொடர்பாக புகைப்படம் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:50 AM IST

தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

தூத்துக்குடியில்  சுமார் 30 அடி தூரம் வரை திடீரென கடல் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:47 AM IST

யாரையும் செயல்படாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார்! இபிஎஸ் புதிய மனு

நிலுவையில் உள்ள வழக்குகளைக் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ். கூறுவது சட்டப்படி ஏற்புடையது அல்ல உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. 

11:46 AM IST

ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசுப் பேருந்து இயங்காது என்று கூறியிருந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அறிவித்துள்ளார். 

11:16 AM IST

ஷாக்கிங் நியூஸ்! தன்னை மறந்து ரொமான்ஸ்! கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய ரயில்! உடல் சிதறி உயிரிழந்த காதல் ஜோடி.!

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி மீது மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

10:52 AM IST

Fanta பாட்டில் ஸ்ட்ரக்சர், எலும்புக்கூடு மாதிரி இருக்கனு கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யபாரதி

நடிகை திவ்ய பாரதியின் உடல் அமைப்பு கேலி செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், கல்லூரியில் படித்ததில் இருந்து தற்போது வரை தான் எதிர்கொண்ட உருவகேலிகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் திவ்ய பாரதி. மேலும் படிக்க

10:45 AM IST

ஆன்லைன் சூதாட்டம்..! பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு இளைஞர் தற்கொலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சல்மான் என்ற 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

10:18 AM IST

மாண்டஸ் புயல் எச்சரிக்கை.! வேகமாக நிரம்பும் ஏரிகள்.! செம்பரம்பாக்கம்,புழல், பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேலும் படிக்க..

10:12 AM IST

16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

10:07 AM IST

2022-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலை வெளியிட்ட கூகுள்! டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே ஒரு நடிகை - என்ன காரணம்?

புகழ்பெற்ற தேடுபொறி தளமான கூகுள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள், நடிகைகள், நட்சத்திரங்கள் பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்த ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஒரே ஒரு நடிகையின் பெயர் மட்டுமே இடம்பெற்று உள்ளது.  மேலும் படிக்க

9:34 AM IST

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் மீனவர் கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து சேதம்

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. 
கடந்த 2 நாட்களில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 

9:31 AM IST

நெருங்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:13 AM IST

5 அடி உயரத்திற்கு எழும் ஆக்ரோஷமாக அலைகள்..! படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற மீனவர்கள்

புயல் காரணமாக காற்றின் வேகம் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் கரையில் நிற்கப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்  ஏற்படாமல் தடுக்கும் வகையில், விசைப்படகுகளை பாதுகாப்பான இடங்கிளல் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க..

8:45 AM IST

3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்

தீவிர புயலாக உள்ள மாண்டஸ், சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் உள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் இப்புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். மாண்டஸ் புயலு் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. 

8:38 AM IST

புளியந்தோப்பில் மரம் விழுந்து பின்னி மில் சுற்றுச்சுவர் சேதம்

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே மரம் விழுந்து, பின்னி மில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

8:36 AM IST

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல், இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். 

8:18 AM IST

இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்ட நிலையில், அப்படத்திற்காக அவரின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.   மேலும் படிக்க

7:54 AM IST

கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:53 AM IST

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:52 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை ஏற்பட போகிறது தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், பொன்னேரி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:39 AM IST

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

7:24 AM IST

வீடு புகுந்து தாக்கியதில் விவசாயி பலி! 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யுங்க! வேல்முருகன்

அரியலூர் விவசாயி மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:14 AM IST

தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தேனி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:01 AM IST

மாண்டஸ் புயல் எதிரொலி! 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும் அலைகள்

மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது, 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன

6:47 AM IST

மிரட்டும் மாண்டஸ் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடல்.!

மாண்டஸ் புயல் காரணமாக மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

12:29 AM IST:

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை தங்கசாலையின் புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் காற்றின் வேகத்தால் சாய்ந்து விழுந்தது. இதை அடுத்து அந்த கம்பத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

11:59 PM IST:

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன

11:47 PM IST:

புயல் கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து மாண்டஸ் புயல் 70 கிமீ தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

11:40 PM IST:

மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து விழுந்துள்ளன

9:38 PM IST:

மாண்டஸ் புயல் காரணமாகக் ஈ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

8:34 PM IST:

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மின்வாரியம், புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

7:00 PM IST:

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

5:41 PM IST:

சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 14 கி. மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தீவிர புயல் புயலாக மாறி, கரையைத் தொடும்போது 85 கி. மீட்டர் வேகத்தில் காற்று வீடும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைத் தொடும் என்று தெரிய வந்துள்ளது.

4:23 PM IST:

மாண்டஸ் புயலால் மழை பெய்து வருவதால் வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பரம் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை (10/12/2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

4:09 PM IST:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4:03 PM IST:

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே வங்கக் கடலில் 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2:07 PM IST:

புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

1:39 PM IST:

சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை - 69 மி.மீ., பெரம்பலூர் மாநகராட்சி பூங்கா - 63 மி.மீ., டிஜிபி அலுவலகம் - 56 மி.மீ., எம்.ஜி.ஆர் நகர் - 51 மி.மீ, ஆலந்தூர் - 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

1:37 PM IST:

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

1:10 PM IST:

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

1:09 PM IST:

தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது, எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

மேலும் படிக்க..

12:47 PM IST:

தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என கூறப்பட்டுள்ளது. 

11:52 AM IST:

சென்னையில் கடல் சீற்றத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்தது. இது தொடர்பாக புகைப்படம் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:50 AM IST:

தூத்துக்குடியில்  சுமார் 30 அடி தூரம் வரை திடீரென கடல் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:47 AM IST:

நிலுவையில் உள்ள வழக்குகளைக் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ். கூறுவது சட்டப்படி ஏற்புடையது அல்ல உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. 

11:46 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசுப் பேருந்து இயங்காது என்று கூறியிருந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அறிவித்துள்ளார். 

11:16 AM IST:

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி மீது மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

10:52 AM IST:

நடிகை திவ்ய பாரதியின் உடல் அமைப்பு கேலி செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், கல்லூரியில் படித்ததில் இருந்து தற்போது வரை தான் எதிர்கொண்ட உருவகேலிகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் திவ்ய பாரதி. மேலும் படிக்க

10:45 AM IST:

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சல்மான் என்ற 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

10:18 AM IST:

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேலும் படிக்க..

10:12 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

10:07 AM IST:

புகழ்பெற்ற தேடுபொறி தளமான கூகுள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்கள், நடிகைகள், நட்சத்திரங்கள் பற்றிய டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்த ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஒரே ஒரு நடிகையின் பெயர் மட்டுமே இடம்பெற்று உள்ளது.  மேலும் படிக்க

9:34 AM IST:

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. 
கடந்த 2 நாட்களில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 

9:31 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:13 AM IST:

புயல் காரணமாக காற்றின் வேகம் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் கரையில் நிற்கப்பட்டு வைத்திருக்கும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்  ஏற்படாமல் தடுக்கும் வகையில், விசைப்படகுகளை பாதுகாப்பான இடங்கிளல் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க..

8:45 AM IST:

தீவிர புயலாக உள்ள மாண்டஸ், சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் உள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் இப்புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். மாண்டஸ் புயலு் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. 

8:38 AM IST:

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே மரம் விழுந்து, பின்னி மில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

8:36 AM IST:

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல், இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். 

8:18 AM IST:

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்ட நிலையில், அப்படத்திற்காக அவரின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.   மேலும் படிக்க

7:54 AM IST:

கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:53 AM IST:

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:52 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், பொன்னேரி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:39 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

7:24 AM IST:

அரியலூர் விவசாயி மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:14 AM IST:

தேனி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

7:01 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது, 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன

6:47 AM IST: