Asianet News TamilAsianet News Tamil

40 ஆண்டுகளுக்குப்பின்! தமிழகத்தில் 9 புதிய ரயில் பாதை! ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: முழுவிவரம்

40 ஆண்டுகளுக்குப்பின், தமிழகத்தில் ரயில்பாதைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன, 9 புதிய வழித்தடத்துக்காக 2023-24 மத்திய பட்ஜெட்டில் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Tamil Nadu will finally receive a Rs 1k Crore fund for nine new train lines in Budget 2023
Author
First Published Feb 6, 2023, 4:36 PM IST

40 ஆண்டுகளுக்குப்பின், தமிழகத்தில் ரயில்பாதைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன, 9 புதிய வழித்தடத்துக்காக 2023-24 மத்திய பட்ஜெட்டில் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய இணைப்புகள் செங்கல்பட்டு-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-ஆரணி-வாலஜா,நகரி, மொரப்பூர்-தர்மபுரி, அட்லபட்டு-புட்டூர், ஈரோடு-பழனி, மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, ராமேஷ்வரம்-தனுஷ்கோரி ஆகிய புதிய பாதைகள் வருகின்றன

கடைசியாக கடந்த 1981ம்ஆண்டு கடைசியாக திருநெல்வேலி-நாகர்கோவில்-கன்னியாகுமரிக்கு இடையே புதிய பாதை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் தாமதமான பணிகளுக்கும் சேர்த்து நிதிஒதுக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

Tamil Nadu will finally receive a Rs 1k Crore fund for nine new train lines in Budget 2023

சென்னை-கடலூர் மாமல்லபுரம் புதுச்சேரியா வழியாக 155 கி.மீ பாதைக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு  புதிதாக பாதைஅமைக்கப்படுகிறது. 
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் “ புதிய ரயில்பாதை செங்கல்பட்டில் தொடங்கி, மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி சென்றடையும். மண்பரிசோதனை உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

திண்டிவனம்-நகரி இடையே 180கி.மீ பணிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்தநிலையில் இனி வேகமெடுக்கும். இந்த ரயில்தடம் முடிந்தால் நகரியிலிருந்து ஆந்திராவில் சித்தூருக்கு இணைப்பு வழங்கப்படலாம்.

இப்படியா ஷாக் கொடுப்பது!அதானி குழுமம் நிதிநிலை குறித்து மூடிஸ் நிறுவனம் ஆய்வு

புதிய ரயில்தடத்தில் 18 ரயில்நிலையங்கள் அமைய உள்ளன. 26 பெரிய பாலங்கள், 200 சிறிய பாலங்கள் கட்டப்பட உள்ளன. கடந்தஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிலம்கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

Tamil Nadu will finally receive a Rs 1k Crore fund for nine new train lines in Budget 2023

திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாலை இடையிலான 70கி.மீ பாதைக்கு ரூ.100 கோடியும் , மொரப்பூர்-தர்மபுரி இடையிலான 36கிமீ தடத்துக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தஇரு தடங்களுக்கு இடங்களுக்கு இடையே 8 ரயில்நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன

தாம்பரம்-திருவண்ணாமலை இடையே ரயில் இணைப்பு வரும் பட்சத்தில் 163 கி.மீ பாதையாக இருக்கும். ஆனால் தற்போது சென்னைவாசிகள் திருவண்ணாமலை செல்ல 225 கி.மீ காட்பாடி, வேலூர் வழியாக சுற்றிச் செல்லவேண்டியுள்ளது.

மொரப்பூர்-தர்மபுரி புதிய தடம் சென்னையை இணைக்கும் வகையிலும் பெங்களூரு-ஹோசூர் பாதைக்கு மாற்றாகவும் இருக்கும். 

அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது

Tamil Nadu will finally receive a Rs 1k Crore fund for nine new train lines in Budget 2023

சரக்குப் போக்குவரத்துக்காக எண்ணூர் துறைமுகம் அட்டிபட்டு-புத்தூர்இடையிலான 88கி.மீ, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி(இருங்காட்டுக்கோட்டை-ஆவடி) 60கி.மீ பாதைகள் முறையே ரூ.50 கோடி, ரூ.57.90 கோடியில் அமைக்கப்படஉள்ளன

மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி பாதைக்காக ரூ.114 கோடியும், ஈரோடு-பழனி இடையே புதிய பாதைக்கு ரூ.50 கோடியும், ராமேஷ்வரம்-தனுஷ்கோடி இடையிலான புதிய வழித்தடத்துக்கு ரூ.385.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios