தமிழ் நாட்டை பொறுத்தவரை, போலீஸ் காரர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என அனைவருக்குமே ஒரு பின்பம் உள்ளது. அதனை உடைக்கும் வகையில் சிலர் செயல்பட்டாலும். அந்த போலீஸ் காரர்கள் பற்றிய நல்ல விஷயங்கள் வெளிவருவது இல்லை.

ஆனால், திரைப்படங்களில் ஹீரோக்கள் போலீசாக நடித்தால் அவர்கள் லெவலே வேறு. மக்களுக்காக விழுந்து விழுந்து பணியாற்றுவார்கள். இப்படி ஒரு போலீஸ் உண்மையில் நமக்காக பணியாற்ற மாட்டாரா என திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கே தோன்றும்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்து வெளியான திரைப்படம் 'திமிரு பிடிச்சவன்'. கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது பல திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

இந்த படத்தில் விஜய் ஆன்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில்  வரும் ஒரு காட்சியில் 'சாலையில் ஓடும் சாக்கடையை போலீஸ் கேரக்டரில் நடித்த விஜய் ஆண்டனி யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய போலீஸ் டீமுடன் சுத்தம் செய்வார். இந்த காட்சியை காணும்போது நிஜ வாழ்க்கையில் இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? என்று எண்ண தோன்றியது  ஆனால் இதுபோன்ற சம்பவம் ஒன்று உண்மையிலேயே நடந்துள்ளது.

ஆம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லான்பிள்ளைபெற்றால் என்ற இடத்தில் சாலையோரம் சேரும் சகதியுமாக சாக்கடை தேங்கி நின்றுள்ளது.  இதனை போலீசார் சிலர் பார்த்தனர். உடனே யாரையும் எதிர்பாராமல்  அய்யனார், முருகன் ஆகிய இரண்டு காவலர்கள் உடனே மண்வெட்டி எடுத்து அந்த சேர், சகதிகளை சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கியது.

போலீசாரின் இந்த செயல் அந்த பகுதி மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.