Asianet News TamilAsianet News Tamil

TN Local Body Election 2022: அதிமுக கோட்டையை வென்று விட்டோம்..கொங்கு வெற்றிக்காக மார்தட்டிய ஸ்டாலின்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஆமோக வெற்றி பெற்ற நிலையில் திமுகவினர் எந்தப்புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
 

Tamil Nadu CM MK Stalin Press Meet
Author
Tamilnádu, First Published Feb 22, 2022, 6:45 PM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற அமைப்புகளில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது, 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதிக்கு மேல் திமுக கூட்டணி வென்றுள்ளது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கைள சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று கூறினார். கடந்த 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழே இந்த வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்திலும் திமுக வெற்றிப்பெற்றுள்ளது என்றும் மக்களை எங்களை விட யாரும் அதிகமாக சந்தித்தது கிடையாது என்றும் அவர் பேசினார்.கொரோனா சூழலில் தான் நான் நேரடியாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் அவர் விளக்கினார்.

திமுகவினர் இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும்.மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திமுகவினர் எந்தப்புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போதே செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னோம்.. எங்களை ஆட்சியில் அமரவைத்தவர்கள் திருப்தியடையும் வகையிலும்,  வாக்கு அளிக்காதவர்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்கவில்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எங்களின் பணி இருக்கும்.அப்படி தான் 9 காலமாக பணி செய்து வருகிறோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு மாநகராட்சி மேயர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios