குறைவான தேர்வுக்கான நாட்கள் இருப்பதால், பாடத்திட்டத்தை குறைக்கப்போவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

குறைவான தேர்வுக்கான நாட்கள் இருப்பதால், பாடத்திட்டத்தை குறைக்கப்போவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுகான பொதுத்தேர்வு தேதிகளும் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அடுத்த மாதம் 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், அதேபோல் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அண்மையில் முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்ததை அடுத்து அடுத்த வாரங்களில் 2 ஆம் கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. தற்போது குறைவான காலமே இருப்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் எவ்வித கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் பயமின்றி படித்து தேர்வெழுத வேண்டும். மாணவர்கள் மனநிறைவுடன் தேர்வெழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.

மார்ச் மாத இறுதிக்குள் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற பிறகு தான் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. கடந்த கூட்ட தொடரில் 27 அறிவிப்புகள் கொடுத்திருந்தோம், அதில் 15 அறிவிப்புகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மீதி அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்ட தொடரில் புதிய அறிவிப்புகள் வரும். 35% முதல் 50% சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் பாட திட்டங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். பின்னர் திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும். மாணவர்கள் பயப்படாமல் உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு தேர்வினை எழுத வேண்டும் என்று தெரிவித்தார்.