திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25ம் தேதி பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாராணி தம்பதியின் இளையமகன் சுஜீத் வில்சன் , அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.ஐந்து நாட்கள் நடந்த மீட்புப்பணி முடிவில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.அரசு மற்றும் அ.தி.மு.க.,  தி.மு.க. - காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் சார்பில்வழங்கப்பட்டது.

சுஜீத் பெற்றோர் சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு வேலை கோரிக்கை குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில் ''சுஜீத்தின் தாய் கலாராணி பிளஸ் 2 வரை படித்துள்ளார். அவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்  என்று தெரிவித்தார்.