சமூக செயல்பாட்டாளர் முகிலன் மீது கற்பழிப்பு வழக்கு போட்டு கைது செய்திருப்பது என்பது உள்நோக்கம் கொண்டது. அவரோடு உறவு கொண்ட இசை என்கிற ராஜேஸ்வரி ஒன்றும் விபரம் தெரியாத அப்பாவிப்பெண் அல்ல என்ற தகவல்களோடு ...I also stand with Mugilan!நானும் முகிலனோடு நிற்கிறேன்! என்கிற ஆதரவுக்குரல் வலைதலங்களில் கோஷமாய் ஒலித்துவரும் நிலையில் முகிலனை ஒத்த போராளியான ‘பசுமைத் தமிழகம்’ சுப.உதயகுமாரனும் அவரை ஆதரித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அவரது பதிவில்,...ஓர் இந்து அறநிலையத்துறை அதிகாரி, அரசு ஊழியர், தன்னோடு வேலைபார்க்கும் பெண் அதிகாரி குளிக்கும்போது ரகசியமாகப் படமெடுத்து ரசிக்கிறான். அவன் அன்று மாலையே வெளியே விடப்படுகிறான் இந்தக் கேடுகெட்ட நீதித்துறையால், காவல்துறையால்!

முகிலன் 37-வயதான ‘பச்சைக் குழந்தை’ ஒருத்தியை; முகிலனுக்குத் திருமணமாகி, திருமண வயதில் ஒரு மகன் இருப்பதை அறிந்தும் முகிலனோடு ஊர் சுற்றித்திரிந்த ஓர் அப்பாவிப் பேதையை “திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி” “பலமுறை” பாலியல் வன்புணர்வு செய்துவிட்டாராம். இப்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாராம்!

பெண்களை கண்ணியமாகவும், மரியாதையோடும் நடத்துகிறவன் நான். என்னோடிருக்கும் ஆண்கள் அனைவரும் பெண்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறவன், வலியுறுத்துகிறவன் நான்.ஆனால் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஒருவனைக் கேவலப்படுத்துவதற்காக, பலவீனப்படுத்துவதற்காக கெட்ட எண்ணத்தோடு, மர்ம சக்திகளின் கைப்பாவையாக இயங்கும் ஒரு பெண்ணை என்னால் ஆதரிக்கமுடியாது!

I also stand with Mugilan!
நானும் முகிலனோடு நிற்கிறேன்!
சுப. உதயகுமாரன் என்று பதிவிட்டிருக்கிறார்.