Asianet News TamilAsianet News Tamil

மம்தாவின் மாஸ் வெற்றி… முதல்வர் ஸ்டாலின் ‘ரியாக்ஷன்’… வெளியான ஒத்த ட்வீட்…

மேற்கு வங்க இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தான பானர்ஜி வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார்.

Stalin wishes mamata Banerjee
Author
Chennai, First Published Oct 3, 2021, 9:05 PM IST

சென்னை:  மேற்கு வங்க இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தான பானர்ஜி வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார்.

Stalin wishes mamata Banerjee

மேற்கு வங்க சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் முக்கிய தொகுதியான பவானிபூர் தொகுதி முடிவை நாடே எதிர்பார்த்தது. காரணம், எம்எல்ஏ ஆகாமல் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி இந்த தேர்தலில் வென்றால் தான் முதலமைச்சராக தொடர முடியும் என்பது தான் காரணம்.

அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்த மம்தா பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி விட்டார். பாஜகவை திணறடித்த அவரின் வெற்றியை மேற்கு வங்க மாநிலமே கொண்டாடி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் தலைவியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Stalin wishes mamata Banerjee

மம்தாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினும் வாழ்த்து கூறி உள்ளார்.

அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளதாவது: மேற்கு வங்க மாநில மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத வெற்றியை இந்த முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கிறது என்று கூறி உள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios