தமிழகம் அமைதி மாநிலமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவலர்களை ரவுடிகள் தாக்க முயலும் போது தான் என்கவுன்டர் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறவது தவறு. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது போன்ற மாயை கிளப்பி விடப்படுவதாகவும் கூறினார்.
 குற்றங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். ஜம்மு- காஷ்மீர் போல அல்லாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.  8 வழிச்சாலைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவது கமல்ஹாசனின் உரிமை என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கருத்து சுதந்திரம் அதிகம். அதிலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் அதிகமாகவே உள்ளதாக கூறினார்.