வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமக் கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதான மாற்றத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த வரை 12 மணிநேரத்தில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அச்சரம்பட்டியை சேர்ந்த 17-வது பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மதுபோதையில் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.  வாய்பேச முடியாத பெண்ணின் தலையில் அடித்து, அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு மாணிக்கம் தப்பியோடியதாக கூறப்படுகிறது.   இது குறித்து கீழசீவல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி இரும்பு பொருளால் தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. 

மோப்ப நாய், லைகா கொண்டுவரப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்ட போது சிறுமியின் வீட்டின் அருகே உள்ள மாணிக்கம் என்பவன் வீட்டிற்கு லைகா சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை கொலை செய்தது அவன் தான் என்பது தெரியவந்தது. மது போதையில் சிறுமியை கொலை செய்ததாக மாணிக்கம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவன் கைது செய்யப்பட்டான்.