கோர்ட்டில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் உட்கார்ந்த கைதி!! அடித்து விரட்டிய பெண் போலீஸ்!

சிவகங்கை நீதிமன்றத்தில் முனியசாமி என்பவர் திடீரென நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

First Published Oct 2, 2018, 1:35 PM IST | Last Updated Oct 2, 2018, 1:35 PM IST

சிவகங்கை நீதிமன்றத்தில் முனியசாமி என்பவர் திடீரென நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்,  கடந்த 2016ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ளார். அதன் பின்பு வழக்கு தொடர்பாக நீண்ட காலம் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டு வாரம் வாரம் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றம் வந்த முனியசாமி திடீரென முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் யாரும் இல்லாத நிலையில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் அமர்ந்துள்ளார்.  மேலும், முனியசாமிக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகிறார். 

Video Top Stories