Asianet News TamilAsianet News Tamil

டெங்குவால் யாருக்கு அதிக பாதிப்பு தெரியுமா..? உயிரிழப்பு ஏற்பட காரணமும் இதுதான்..!

கொசு கடியின்யின் மூலமாக பரவக்கூடிய வைரஸே டெங்குவிற்கு மிக முக்கிய காரணம். இந்த வைரஸ் உடலில் நுழைந்தவுடன் ஒரு வாரத்திற்குள் அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். 

signs and symptoms of dengue and kids and old age persons will suffer by dengue
Author
Chennai, First Published Dec 25, 2018, 6:02 PM IST

டெங்குவால் யாருக்கு அதிக பாதிப்பு தெரியுமா..? 

கொசு கடியின்யின் மூலமாக பரவக்கூடிய வைரஸே டெங்குவிற்கு மிக முக்கிய காரணம். இந்த வைரஸ் உடலில் நுழைந்தவுடன் ஒரு வாரத்திற்குள் அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். கடுமையான தலைவலி, காய்ச்சல், உடல் வலி, கண் சிவப்பு, கண்ணின் உட்புறமாக அதிக வலி, தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல், அளவுக்கு அதிகமான கடும் காய்ச்சல். இது போன்ற பல அறிகுறிகள் தோன்றும்.

signs and symptoms of dengue and kids and old age persons will suffer by dengue

எப்போது உயிரிழப்பு ஏற்படும் தெரியுமா..? 

டெங்குவை  பொறுத்தவரை பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஒருவருக்கு டெங்கு வந்து ஒரு வார காலத்திற்குள் சரியாகி விடும்.ஆனால் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ள நபர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

signs and symptoms of dengue and kids and old age persons will suffer by dengue

அதாவது, ரத்தம் உறைதலுக்கு தேவையான ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழிக்க தொடங்கும் டெங்கு வைரஸ். அப்போது உடல் பாகங்களில் இருந்து ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கசிய தொடங்கும். ஒரு கட்டத்தில் ரத்த கசிவை கட்டுப்படுத்த முடியாமல் உயிரிழப்பு ஏற்படும்.

signs and symptoms of dengue and kids and old age persons will suffer by dengueஇந்த நிலையில் தான்,தீவிர சிகிச்சை தேவைப்படும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களை உட்செலுத்தி உயிர் காப்பாற்றப்படுகிறது. எனவே நம்மால் முடிந்த வரை மழைக்காலத்தில் மிகவும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.நாம் வசிக்கும் இடத்தை சுற்றி மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர், நீண்ட நாட்களாக தேங்கி உள்ள கழிவு நீர், நீர் தொட்டிகள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த கொசு உருவாகி மனிதர்களுக்கு செஞ்சுவை பரப்பி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.   

Follow Us:
Download App:
  • android
  • ios