டாஸ்மாக்கில் குவியும் குடிமகன்கள்..! பீர் தட்டுப்பாட்டில் டாஸ்மாக் கடைகள்

கொளுத்துகிறது கோடை வெயில். இக்கோடை வெயிலை சாளிக்க மக்கள் ஜீஸ், மோர் போன்றவற்றை அருந்தினால் மதுப்பிரியர்களின் ஆவலோ சூட்டை தணிக்க பீர் பக்கம் போயிருக்கிறது. 

சரக்கடிக்கும் குடிமகன்களால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடானது நிலவுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 5,500 மேலாக மதுப்பான கடைகள் உள்ளனர். இவைகளில் தனியார் பார்களும் அடங்கும்.

இந்த பார்களில் வழக்கமாக விற்கும் சரக்குகளை விட கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை சமாளிக்க பீர்தான் அதிகம் விற்பனையாகிறதாம். அரசு மதுபானக்கடைகளில் பீர் விற்பனை 32 சதவீதமாகவும், தனியார் பார்களில் 60 சதவீதமாகவும் தற்போது விற்பனையானது நடைபெற்று வருகிறது எனவும் சொல்கிறார்கள். 

டாஸ்மாக் ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.“ எப்ரல் மாதம் வரை சரக்கு வகைகளான வீஸ்கி பிராந்திதான் அதிகமாக விற்பனையானது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமானதில் இருந்து குளிரான பீர் வேண்டுமென கேட்டு காத்திருந்து வாங்கி குடிக்கிறார்கள். இதனால் வழக்கத்தும் அதிகமாக பீர் விற்பனை அதிகரித்திருக்கிறது. பீர் விலையும் சத்தமில்லாமல் பத்து ரூபாய் ஏறியிருக்கிறது” என்றார்.