அரசு அதிகாரிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..! 

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதத்தில் நடைப்பெற உள்ளதால், தேர்தல் ஆணையம்  சூடு பிடிக்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதாவது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர்கள், உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

அதன் படி, கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து, யாரெல்லாம் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார் என்பது குறித்து புது லிஸ்ட் தயாராகி  வருகிறது.