சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விலையேற்றத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில், சென்னையில் திடீரென்று ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்குநாள் பெட்ரோல் - டீசல் விலையேற்றம் காரணமாக ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரூ.10 கட்டணம் வாங்கப்பட்ட வழித்தடங்களில் ரூ.15 ஆகவும், ரூ.15 கட்டணம் வழங்கப்பட்ட வழித்தடங்களில் ரூ.20 ஆகவும், ரூ.20  கட்டணம் வாங்கப்பட்ட வழித்தடங்களில் ரூ.25 ஆகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது.