இந்த மாதம் 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் தீபாவளிக்காக ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதே போல் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. 

அக்டோபர் 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். 

அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது