Asianet News TamilAsianet News Tamil

திருவாரூரில் 3-வது ஊரக வளர்ச்சித் துறையினர் வேலை நிறுத்த போராட்டம்; 900 பேர் பங்கேற்பு...

Rural Development officers held in strike on 3rd day in Thiruvarur 900 officers participated
Rural Development officers held in strike on 3rd day in Thiruvarur 900 officers participated
Author
First Published Jul 6, 2018, 12:08 PM IST


திருவாரூர்

திருவாரூரில் 3-வது நாளாக நடைப்பெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 900 பேர் ஈடுபட்டனர். மேலும், இவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

"ஊராட்சிச் செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். 

விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்" உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஊரக வளர்ச்சித் துறையினர் அறிவித்திருந்தனர். அறிவித்தபடியே தங்களது வேலை நிறுத்த போராட்டம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கினர்.

இந்தப் போராட்டம் திருவாரூர் மாவட்டத்திலும் தொடங்கியது. இப்போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. 

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 900 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலாளர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், அனைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios