போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி வழங்கிய  வங்கி தலைமை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி பிரியா. இவர்களது நண்பர் ராஜேஷ்கண்ணா. கடந்த சில மாதங்களுக்கு முன் செந்தில்குமார், பிரியா மற்றும் ராஜேஷ்கண்ணா ஆகியோர், அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியை அணுகினர்.

அப்போது அங்கிருந்த தலைமை மேலாளரிடம், தனித்தனியே பின்னலாடை நிறுவனம் நடத்துவதாக சில ஆவணங்களை கொடுத்து, ரூ.10 கோடி கடன் பெற்றனர். மேலும், இதேபோல் பலரிடமும் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி, ஆவணங்களை பெற்று கொண்டனர். அந்த ஆவணங்களை மாற்றி, போலியாக தயாரித்து, மேலும் வங்கியில் கடன் பெற்று கொண்டனர்.

இதனால், பாதிக்கப்பட்ட 3 பேர், போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் கடன் அளித்த வங்கி ஊழியர் சோமையாஜூலுவை கைது செய்தனர். இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த செந்தில்குமார், அவரது மனைவி பிரியா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், வங்கி மேலாளர் சங்கரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.