பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை, பைக்கில் வந்த ரவுடி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல்லில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த ரவுடி ஒருவர், போலீசாரை தாக்கியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அந்த ரவுடி தப்பியோட முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் போலீசார், அந்த நபரை பிடித்து கட்டி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த ரவுடி போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரவுடியிடம் போக்குவரத்து போலீசார் வாகன லைசென்ஸ் கேட்கும்போது, அந்த ரவுடியோ, எந்த ஊரு என்று மிரட்டும் தொணியில் கேட்கிறார். மேலும், போலீஸ் என்னிடம் பேச முடியுமா? வீடியோ எடுக்காதே... என்று மிரட்டுகிறார். போலீசை நீ அடிப்பாயா? என் செல்போனை பறிப்பாயா? என்ற போலீசாரின் கேள்விக்கு, தொடர்ந்து மிரட்டும் தொனியிலேயே பேசி வருகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வளவு பேசிய ரவுடியை சும்மா விடுமா போலீஸ்... அலேக்கா தூக்கி வந்து கை கால்களை கட்டி ஊமை குத்து குத்தியுள்ளார்.