Asianet News TamilAsianet News Tamil

தொடரும் அதிகனமழை… சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!! Chennai Flood

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

red alert for chennai and chennai flood
Author
Chennai, First Published Nov 10, 2021, 3:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

#chennaiflood வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெரும்பாலும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகனமழை ஐந்து இடங்களிலும் மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருப்பூண்டி தலா 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வட தமிழக கடற்கரையையொட்டி நிலவக்கூடும். பின்னர் தொடர்ந்து  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதியில் காரைக்கால் - ஸ்ரீஹறிகோட்டா இடையே கடலூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும்.

red alert for chennai and chennai flood

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகன மழையும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, புதுச்சேரி, கோயம்பத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

red alert for chennai and chennai flood

இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேடை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் ஒருசில பகுதிகளில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios