3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். அந்த கார்டுகளுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

ரேஷன் கார்டுகளை 3 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால் ரத்து செய்யுமாறு மத்திய உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மீதான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ரேஷன் கார்டு பயன்பாடு குறித்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவுரையை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினார்.அப்போது அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கார்டுகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்பட மாட்டாது. அதற்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.