சென்னை சோழிங்க நல்லூரில் சத்யபாமா நிகர் நிலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ஜேப்பியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இருபாலர் படிக்கும் கல்லூரியான இங்கு மாணவ மாணவிகள் தங்குவதற்கு தனி தனி விடுதி வசதி உள்ளது.

இங்குள்ள மாணவர்களுக்கு உணவு தரமாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்  காலை உணவருந்த வந்த மாணவர்கள் சிலர் சட்னிக்குள் எலி ஒன்று நீச்சலடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சாம்பாரில் கரப்பான் பூச்சி செத்து போய் கிடப்பதை கண்டு ஆத்திரம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறையினரை வரவழைத்த கல்லூரி நிர்வாகம் , மாணவ மாணவிகளை வீடியோ எடுத்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் மாணவ – மாணவிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதே கல்லூரியில் ஆர்.ஓ வாட்டர் டேங்கில் தவளைகள் உயிருடன் உள்ளதாகவும்இ சாப்பாட்டில் புழுக்கள் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.