Asianet News TamilAsianet News Tamil

ராம மோகன ராவ் தனி வார்டுக்கு மாற்றம் - “இன்று மாலை டிஸ்சார்ஜ்...?”

ram mohan-roa-admitted-in-hospital-4BRFBR
Author
First Published Dec 26, 2016, 1:14 PM IST


முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் பணம், நகை, ஏராளமான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

அந்தநேரத்தில், ராமமோகன் ராவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராமமோகன் ராவ், தற்போது குணமடைந்துள்ளார். இதையடுத்து அவர், தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios