கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தற்போது உருவாகி உள்ள வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு, மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது  

இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை  பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

கடந்த 24 மணி நேரத்தில், மேட்டூர் மற்றும் குன்னூரில் 4 செமீ மழையும், திருமங்கலத்தில் 2 செ.மீ மழையும்  பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.