Asianet News TamilAsianet News Tamil

கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 

rain will start tomorrow onwards
Author
Chennai, First Published Sep 27, 2018, 12:57 PM IST

கடந்த மே மாதம் இறுதியில் சற்று முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்தது.

அதே நேரத்தில் கேரளாவிலும், கர்நாடகாவிலும் தென் மேற்குப் பருவ மழை வெளுத்து வாங்கியது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதமழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தனர் பலர் மாயமாகினர். 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கேரள மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

rain will start tomorrow onwards

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் பலத்த மழை பெய்தது.

 இதனிடையே வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் உடனடியாக அன்றில் இருந்தே வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை சீசனில்தான் அதிக மழை கிடைக்கும். இதனால் தமிழக விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

rain will start tomorrow onwards

இந்நிலையில்,  வெப்பசலனம் காரணமாக திருச்சி,பெரம்பலூர்,கரூர் உள்ளிட்ட உள் தமிழக மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கோவை-தடாகம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios