தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம்  முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது, தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக  தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல்,வள்ளுவர் கோட்டம், வில்லிவாக்கம்,அடையாறு, சைதாப்போட்டை. குரோம்பேட்டை, சாலி கிராமம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதைப் போல பாரிமுனை, மதுரவாயில், ஆவடி, திருநின்றவூர், துரைப்பாக்கம், பல்லாவரம் மற்றும் தரமணி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது.
இந்த மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.